குமரிக் கடலில் மேலடுக்கு சுழற்சி ஒருசில இடங்களில் மழை பெய்யும்

சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் அதிக பட்சமாக 107 டிகிரி வரை வெயில் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இருப்பினும் திருத்தணி, வேலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் நேற்று நிலவியது.

இந்நிலையில், குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக குமரிக்கடலில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அந்த காற்று சுழற்சி வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக உதகமண்டலத்தில் 100 மிமீ, ஓசூர், வால்பாறை, ஓமலூர், மேட்டூர், 70 மிமீ, பரூர் 60 மிமீ, பேச்சிப்பாறை 40 மிமீ மழை பெய்துள்ளது. இதையடுத்து, குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதால், கேரளா, தென் தமிழகப் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. உள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: