தேர்தல் விடுமுறைக்கு பிறகு மதுவிற்பனை 20% அதிகரிப்பு: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 18ம் தேதி  தேர்தல் நடந்தது, இதனால், தமிழகத்தில் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. இதனால், விடுமுறைக்கு முன்பாகவே குடிமகன்கள் கூடுதலாக மதுவகைகளை வாங்கி பதுக்கி வைத்தனர். இதனால், டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு முன்பு வரை ₹423 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இந்தநிலையில், தேர்தல் முடிந்தும் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும், பார்களும் மீண்டும் திறக்கப்பட்டன. மூன்று நாள் விடுமுறையால் தவித்துபோயிருந்த ‘குடிமகன்கள்’ கடைகளின் முன்பாக அணிவகுக்க தொடங்கினர். இதனால், நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டுமே தமிழகத்தில் வழக்கத்தை விட 20 சதவீதம் மதுவிற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  பல  இடங்களில் கடைகளின் முன் கூட்டம் அலைமோதியது.காலையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு குடிமகன்கள் குவிந்தனர். குறிப்பாக, நாள் தோறும் ₹80 முதல் ₹90 கோடி வரையில்தான் மது விற்பனை இருக்கும். இது, நேற்று முன்தினம் அதிகரித்து காணப்பட்டது.₹140 கோடி வரையில் விற்பனையானது என்றனர் டாஸ்மாக் அதிகாரிகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: