சார்பதிவாளர் அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பில் குளறுபடி உள்ளதா?: பதிவுத்துறை ஐஜி அறிக்கை கேட்பு

சென்னை: தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இவற்றில் வருவாயை பெருக்குவதற்காக, கடந்த 2014ல் ஏப்ரல் 1ம் தேதி புதிய வழிகாட்டி மதிப்பு  அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று பதிவுத்துறை எதிர்பார்த்தது. ஆனால், வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடி காரணமாக ஆண்டுக்கு ₹7 ஆயிரம் கோடி ஈட்டுவதே பெரும் சவாலாக இருந்தது. குறிப்பாக, வணிக பகுதி குடியிருப்பு பகுதியாகவும், குடியிருப்பு பகுதி விவசாய பகுதியாகவும், வணிக பகுதி சில இடங்களில் விவசாய பகுதி எனக்குறிப்பிடப்பட்டு உள்ளது.குறிப்பாக, வழிகாட்டி மதிப்பில் 10 ஆயிரம் இனங்களுக்கு மேல் தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக பதிவுத்துறைக்கு புகார் வந்தது.இதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரபதிவை அதிகப்படுத்த வழிகாட்டி மதிப்பில் 33 சதவீதம் குறைத்து உத்தரவிட்டது. இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிபார்த்தது.

 அதன்படி கடந்த 2017-2018ல் ₹9 ஆயிரம் கோடியும், 2018-2019ல் ₹11 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில், வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடியை சரி செய்தால் இன்னும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று பதிவுத்துறை எதிர்பார்க்கிறது. இந்த நிலையில், பதிவுத்துறை சார்பில் வழிகாட்டி மதிப்பு குளறுபடி சரி செய்ய நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.அதன்படி, பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் சார்பில் அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ‘வழிகாட்டி மதிப்பு குளறுபடி பகுதி உள்ளதா என்பதை கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டும்.மேலும், இது தொடர்பான விவரங்களை 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது, பதிவுத்துறை வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: