இன்ஜினியரிங் கவுன்சலிங் விரைவில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்ஜினியரிங் கவுன்சலிங் தொடர்பாக இன்றோ, நாளையோ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இன்ஜினியரிங் கவுன்சலிங் தொடர்பான பணிகளை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில்  தொடங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம், உயர்கல்வித்துறை இடையேயான மோதலால் இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்துவதில் அண்ணா பல்கலைக்கழகம் தலையிடாது என்று அண்ணா பல்கலை  துணை வேந்தர் சூரப்பா அறிவித்தார். இதை தொடர்ந்து, யார் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்துவது என்பது புரியாத புதிராக இருந்தது. இதற்கிடையே, உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்ப கல்வி  இயக்ககம் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தும் என்று ஏப்ரல் 3ம் தேதி கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 ரிசல்ட் ஏப்ரல் 19ம் தேதி வெளியானது. இதனால் உயர்கல்வித்துறை இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான பணிகளை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்ஜினியரிங் கலந்தாய்வை  நடத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரம்  நீடித்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கலந்தாய்வு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பின்னரே உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி கொடுக்க முடியும். இன்ஜினியரிங் கலந்தாய்வு  அறிவிப்பு இன்றோ, நாளையோ வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: