புது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்

நாட்டின் மிகவும் பிரபலமான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம், தனது புகழ்வாய்ந்த பல்சர் வரிசையில் புத்தம் புதிய மாடல் ஒன்றை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பஜாஜ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் கூறுகையில், “பஜாஜ் நிறுவனம் பஜாஜ் சிடி100, பிளாட்டினா மற்றும் பல்சர் ஆகிய மாடல்களில் ஓர் குறிப்பட்ட மாற்றத்தை செய்ய இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு புதிய ஸ்மார்ட்டான ஐடியாக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆகையால், பஜாஜ் சிடி100, பிளாட்டினா மற்றும் பல்சர் ஆகிய ஒவ்வொரு மாடல்களிலும் ஓர் தனித்துவமான புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட உள்ளன. அவ்வாறு, கொடுக்கப்படும் புதிய மாற்றம் வாடிக்கையாளர்களை நிச்சயமாக கவரும் இருக்கும். மேலும், இந்த புதிய மாற்றங்கள் மிக மிக புதுமையானதாக இருக்கும்” என்றார்.இதனால், பஜாஜ் நிறுவனத்தின் புதிய மாடல் பல்சர், பிளாட்டினா, சிடி100 ஆகிய மோட்டார் சைக்கிள்கள் மிகவும் அற்புதமான சில மாற்றங்களும் வருகிற ஜூன் மாதம் முதல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை 2020ம் ஆண்டில் வெளியிட திட்டம் தீட்டி வரும் நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு, போட்டியாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அறிவிப்பால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், புதியதாக அறிமுகமாக இருக்கும் இந்த பைக்குகள், பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு தரத்திற்கு ஏற்ப உருவாகும் என  கூறப்படுகிறது. சமீபத்தில், பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்பெற்ற பல்சர் 180 மாடலை விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், 180-இன் உற்பத்தியையும் ஓரிரு மாதங்களில் நிறுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. பஜாஜின் இந்த திடீர் முடிவிற்கு பல்சர் 180எப் என்ற புதிய மாடல் வருகையே காரணம் என பரவலாக கூறப்பட்டது. இதனால், பல்சர் 180 ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.இந்நிலையில், ராஜீவ் பஜாஜ் அறிவித்திருக்கும் இப்புதிய தகவல், சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பல்சர் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் அனைவரின் பார்வையும் வருகிற ஜூன் மாதம் பஜாஜ் பக்கம் திரும்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: