பாஜவில் சேர்ந்த உடனேயே பிரக்யாவுக்கு போபாலில் சீட்: திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டி

போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு போபால் தொகுதியில் போட்டியிட பாஜ சீட் தந்துள்ளது.கடந்த 2008ல் மகாராஷ்டிராவின் மாலேகான் மசூதி அருகே குண்டுவெடித்தது. இதில் 6 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் சாத்வி பிரக்யா சிங் தாகூரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது  செய்தது. 14 வயதில் துறவறம் பூண்ட பிரக்யா ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளில் இருந்துள்ளார். மாலேகான் வெடிகுண்டு வழக்கில் இருந்து அவர் சமீபத்தில் விடுதலையானார்.

இந்நிலையில், நேற்று அவர் பாஜ.வில் இணைந்தார். அடுத்த சில மணி நேரத்தில் போபால் பாஜ வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். போபாலில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டியில் உள்ளார்.  1989ம் ஆண்டு முதல் பாஜ கைவசம் உள்ள இத்தொகுதியை இம்முறை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில் பிரக்யா களமிறக்கப்பட்டு உள்ளதாக பாஜ கட்சியினர் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: