ஓட்டுக்கு எடப்பாடி பணம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்: கலெக்டர் பேட்டி

சேலத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது, முதல்வர் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வந்ததகவலை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளதாக கலெக்டர் ரோகிணி கூறினார். சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். சின்னக்கடை வீதியில் உள்ள பழக்கடை ஒன்றில் வாக்கு  சேகரித்தபோது, வாழைப்பழம் விற்கும் பெண் வியாபாரிக்கு பணம் கொடுத்தார்.இதனிடையே, ஓட்டுக்காக பெண் ஒருவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்தார் என்ற தகவலுடன், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர், ``ஒரு சீப் வாழைப்பழம்  வாங்கினேன். அதற்கான பணத்தையே கொடுத்தேன்’’ என விளக்கம் அளித்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, நேற்று சேலம் தொகுதி தேர்தல் அதிகாரியான கலெக்டர்  ரோகிணியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ``சேலத்தில் ஓட்டுக்கு முதல்வர் பணம் கொடுத்ததாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை. ஆனாலும் ஊடகங்களில் வந்துள்ள செய்தியின்  அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: