கலவர பூமியான கரூர்..... அதிமுக-காங்கிரசார் இடையே மோதல்: பிரச்சாரம் செய்ய ஆட்சியர் தடை

கரூர்: வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பரப்புரையின் போது அதிமுக-திமுக கூட்டணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் மத்திய மண்டல ஐஜி வரதராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பரப்புரையை நிறைவு செய்ய அதிமுகவினரும், திமுகவினரும் ஒரே இடத்தில் அனுமதி கேட்டனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். மோதலை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பரப்புரை செய்ய தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாஞ்சில் சம்பத் கார் மீது தாக்குதல்

கரூர் அருகே திமுகவினருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நாஞ்சில் சம்பத் மீது மர்மநபர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கரூர் வெங்கமேடு பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் நாஞ்சில் சம்பத் கார் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக  எந்தவித காயமும் இன்றி தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டமிட்டபடி பரப்புரை

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே திட்டமிட்டபடி இறுதிக்கட்ட பரப்புரை நடைபெறும் என அத்தொகுதி காங்.வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: கரூர் தொகுதியில் நடந்து கொண்டிருப்பது இறுதிக்கட்ட பிரச்சாரமல்ல யுத்தம். மாலை 6 மணிவரை பரப்புரை நடைபெறும். இதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றிருக்கிறோம். அதிகாரத்தைவிட, அராஜகத்தை விட உண்மை வலிமையானது என ஜோதிமணி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: