அண்ணா பல்கலை தற்காலிக துணைபேராசிரியர்கள் சங்கம் திமுகவிற்கு ஆதரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக துணைபேராசிரியர்கள் சங்கம் திமுகவிற்கு தன்னுடைய ஆதரவை அளித்துள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் தலைவர் டி.சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பிரசார உரையில் திமுக ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரமாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நாங்கள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரிகளின் தற்காலிக துணைப்பேராசிரியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். திமுக தலைவர் கூறிய கருத்துக்களை எங்கள் சங்கத்தின் சார்பாக வரவேற்று, நாங்கள் அனைவரும் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: