1.420 மில்லி கிராம் பவுனில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்த பொற்கொல்லர்

சிதம்பரம்: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை நினைவு கூறும் வகையில் 1 கிராம் மற்றும் 420 மில்லி கிராம் பவுனில் நாடாளுமன்ற கட்டிடத்தை சிதம்பரம் பொற்கொல்லர் வடிவமைத்து அசத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(37). இவர் சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகைகள் தயாரிக்கும் கடை வைத்துள்ளார். இவர் வழக்கமாக நகை தயாரிக்கும் தொழில் செய்தாலும் இடை, இடையே ஏதேனும் வித்தியாசமாக செய்து சாதனை படைப்பது வழக்கம்.

வருகின்ற 18ம் தேதி தமிழகம், புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் நடப்பதை முன்னிட்டு தேர்தலை நினைவு கூறும் வகையில் டில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டித்தை 1 கிராம் 420 மில்லி கிராம் பவுனில் நுணுக்கமாக செய்துள்ளார். மேலும் அதன் அருகே ஒரு சிறுமி 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து செய்தி கூறுவது போலும், வாக்குப்பதிவு செய்தற்காக ஒற்றை விரலை காட்டுவது போலும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே 8 கிராம் எடையில் தாஜ்மஹால், 2 கிராம் எடையில் டில்லி செங்கோட்டை, மேலும் குறைந்த எடையில் நடராஜர் கோயில் பொற்கூரை, கைவிசிறி, தாலி, மோதிரம், தூய்மை இந்தியா படைப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: