நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்: முதல்வர் , துணை முதல்வர், சினிமா பிரபலங்கள் இரங்கல்

சென்னை: நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமாகியுள்ளார். ராமநாதபுரத்தில் வீட்டில் இருந்தபோது ஜே.கே.ரித்தீஷ்க்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே ஜே.கே.ரித்தீஷ் உயிர் பிரிந்துவிட்டது. ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜே.கே.ரித்தீஷ் வாழ்கை வரலாறு:

* இலங்கை கண்டியில் 5 மார்ச் 1973 ஆண்டு பிறந்த ரித்தீஷ்-க்கு 46 வயது தான் ஆகிறது.

* ஜே.கே.ரித்தீஷின் இயற்பெயர் சிவக்குமார்; இவருக்கு ஜோதீஷ்வரி மனைவியும் அரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர்.

* 2009-ல் திமுக சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

* கானல்நீர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு ஜே.கே.ரித்தீஷ் அறிமுகமானார்.

* நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தமிழில் கானல்நீர், நாயகன், பெண்சிங்கம், எல்.கே.ஜி உள்ளிட்ட 4 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* ஜே.கே.ரித்தீஷ் நடித்த எல்.கே.ஜி என்ற படம் அண்மையில் வெளியானது.

* எல்.கே.ஜி படத்தில் ஜே.கே.ரித்தீஷ் நடிப்பு பெரும் பாராட்டுக்கு உள்ளானது.

சினிமா பிரபலங்கள் இரங்கல்:

* ஜே.கே ரித்திஷ் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது; ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என நடிகர் விஷால் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

* நடிகர் ஜே.கே.ரித்திஷின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது; 2 நாட்களுக்கு முன் தான் அவரை சந்தித்தேன் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

* ஒரு நல்ல தம்பியை நான் இழந்துவிட்டேன்; நடிகர் ஜே.கே.ரித்திஷின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

* நடிகர் ஜே.கே.ரித்திஷின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது, ஜே.கே.ரித்திஷின் மரணம் என்னால் நம்ப முடியவில்லை என்றும் ஆர்கே பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: