வருமான வரி சோதனையில் ரூ.49 கோடி...தேர்தல் பறக்கும் படையால் ரூ.128.32 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாஹூ

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் இதுவரை ரூ.49 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதே போல் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி சோதனையில் இதுவரை ரூ.128.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 280 கோடி மதிப்பிலான 970 கிலோ தங்கம் மற்றும் 600 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். ரூ.34 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், ரூ.7.77 கோ மதிப்பிலான பரிசு பொருட்கள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள சேலை மற்றும் வேஷ்டிகளை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்தார். தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பாக 4,282 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மதுக்கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி ஏப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை தேதியான மே 23-ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்யபிரதா சாஹூ - டிஜிபி அசுதோஷ் சுக்லா சந்திப்பு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் டிஜிபி அசுதோஷ் சுக்லா சந்திப்பு மேற்கொண்டார். தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சாகுவுடன் சுக்லா ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிகளுக்கான டிஜிபி ஆக பணி நியமனம் செய்யப்பட்ட சுக்லா இரண்டாவது முறையாக சாகுவுடன் ஆலோசனை நடத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: