நிசாமாபாத் தொகுதியில் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு..: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க வாய்ப்பு!

நிசாமாபாத்: 185 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிசாமாபாத் மக்களவை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு 12 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 178 விவசாயிகள் உள்பட 185 பேர் களத்தில் உள்ளதே இயற்கு காரணமாகும். ஒரு மின்னணு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. நிசாமாபாத்தில் உள்ள 1,778 வாக்குச்சாவடிகளிலும் தலா 12 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எம்.3 எனப்படும் அதிநவீன மின்னணு இயந்திரங்களும் கட்டுப்பாட்டு கருவிகளும், விவி பேட்களையும் தேர்தல் ஆணையம் வரவழைத்திருந்தது. வாக்குச்சாவடிகளில் ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சம் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இணைக்கப்பட்டு வந்த நிலையில், நிசாமாபாத் தொகுதியில் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணைக்கப்பட்டன.

மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதலாக 2 அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அதிக மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது உலகில் இதுவே முதல்முறை என்பதால் நிசாபாத் தொகுதி கின்னஸ் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்த முயற்சியை கின்னஸ் சாதனை குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, மாதிரி வாக்குப்பதிவு நடைபெற கூடுதல் நேரமானதால் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்க நேரிட்டது. நிசாமாபாத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, கணவருடன் சென்று நீண்ட நேரம் காத்திருக்கு வாக்களித்தார். மொத்தம் 15 லட்சத்து 53 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட நிசாமாபாத் மக்களவைத் தொகுதியில் 3 லட்சத்து 73 ஆயிரம் விவசாய வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: