மக்களவை தேர்தலை முன்னிட்டு 'ஒரு விரல் புரட்சி'டூடுளை வெளியிட்டு அசத்தியுள்ள கூகுள்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளதை ஒட்டி அதனை வரவேற்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது டூடுளை மாற்றி அமைத்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிற. 91 தொகுதிகளில், 1,285 பேர் களத்தில் உள்ளனர். இதில் 89 பேர் பெண்கள் ஆவர். பெரும்பாலான தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம், வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகப்பு பக்கத்தை மாற்றியமைத்துள்ளது. ஒரு விரல் புரட்சியை அடையாளமாக வைத்து டூடுள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து உள்ளே சென்றால்,வாக்களிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. முதல்முறை வாக்காளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும், எந்தெந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது மற்றும் வேட்பாளர்கள் யார் யார் என்பன உள்ளிட்ட பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: