தெலுங்கு தேசம் வேட்பாளர்கள், ஆதரவாளர்களை குறி வைத்து ஐடி ரெய்டு : சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்

விஜயவாடா: விரைவில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் பண நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் வருமான வரித்துறையும் அவப்போது அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்தை தடுக்கும் வகையிலும், அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கிலும் ஐடி ரெய்டு நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிதுள்ளன.  இந்த சூழலில்,  ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது.

இதனை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக கூறி விஜயவாடாவில் அவர் தர்ணா போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி உத்தரவின் பேரில் தான் தெலுங்கு தேசம் கட்சியனரை குறிவைத்து ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படியே நடக்க வேண்டும். அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ள ஒரு கட்சி மற்ற கட்சியை அடக்க நினைக்க கூடாது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: