5 லட்சம் பயணாளிகள் தகவல்கள் திருடப்பட்டதையடுத்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் முடக்கம்

டெல்லி: கூகுள் ப்ளஸ் சமூக வலைதள சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்திக்கொண்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை கூகுள் தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில்  வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில்  அதிகம் ஆர்வம் காட்டாத பயனாளர்கள் பின்னர் கூகுள் ப்ளஸை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் சமூக வலைதளங்களின் ராஜாவாக இருக்கும் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவவைகளுக்கு கூகுள் ப்ளஸ் கடும் சவாலாக இருக்கும்  என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  பேஸ்புக், ட்விட்டர் ஆகியவவைகளுக்கு கூகுள் ப்ளஸூல் நேரடி போட்டி கொடுக்க முடியவில்லை.

 

இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் சுமார் 5 லட்சம் பேர்களின் தனிப்பட்ட தகவல்கள் கூகுள் ப்ளஸ் மூலம் திருடப்படுவதாக செய்தி வெளியானது. தொடர்ந்து சுமார் 438 வேறு செயலிகளில் இருந்து  பயணாளிகளின் பெயர், இ-மெயில் முகவரி, பாலினம், பணி செய்யும் முகவரி உள்ளிட்டவை திருடப்பட்டது இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதத்திலேயே இந்த பிரச்னை தெரிய வந்தாலும்  அப்போது கூகுள் நிறுவனம் இது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால், தகவல் திருட்டு காரணமாக கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் மூடப்படும் என்றும் 10 மாதங்களுக்குள்  பயனாளர்கள் தங்களின் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் முடக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: