சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் கிருஷ்ணா பூனியா போட்டி

ஜெய்பூர்: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கிருஷ்ணா பூனியா நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிருஷ்ணா பூனியா, நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுகிறார். கிருஷ்ணா பூனியா ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தனது பயிற்சியாளரான விளையாட்டு வீரர் வீரேந்திர சிங்கை திருமணம் செய்து கொண்டதால், ராஜஸ்தானில் வசித்து வருகிறார்.

இதனால், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் ஊரகத் தொகுதியில் கிருஷ்ணா பூனியா போட்டியிடுகிறார். ராஜஸ்தான், மகாராஷ்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து 9 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இதுவரை 325 வேட்பாளர்களின் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: