சகோதரர் தேஜஸ்வியுடன் மோதல் புதிய கட்சி தொடங்கும் லாலுவின் மூத்த மகன்

பாட்னா: சகோதரர் தேஜஸ்வி யாதவுடன் ஏற்பட்ட மோதலால் புதிய கட்சி தொடங்கப் போவதாக கூறியிருக்கும் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், சரண் தொகுதியில் அவரது தாய் ரப்ரி தேவி போட்டியிட கேட்டுக் கொண்டுள்ளார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. மக்களவை தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் தனக்கு வேண்டியவர்களுக்கு 2 சீட் கொடுக்குமாறு கேட்டதை தேஜஸ்வி புறக்கணித்தார். ஆனால், லாலு, அவரது மனைவி ரப்ரி தேவியும் ஏற்கனவே வெற்றி  பெற்ற சரண் தொகுதியில், தேஜ் பிரதாப் யாதவின் மாமனார் சந்திரிகா ராயை  வேட்பாளராக தேஜஸ்வி அறிவித்துள்ளார்.

மனைவி பிரிந்து விவகாரத்துக்கு  விண்ணப்பித்துள்ள நிலையில், மாமனாருக்கு சரண் தொகுதியை ஒதுக்கியது தேஜ் பிரதாப்புக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் பொறுப்பை உதறிய தேஜ் பிரதாப் ‘லாலு ரப்ரி மோர்சா’ என்ற புதிய கட்சியை தொடங்கப் போவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். இதனால் சரண் தொகுதியில் போட்டியிட தனது தாயிடம் வலியுறுத்தி உள்ள தேஜ் பிரதாப், ரப்ரி தேவி ஒப்புக் கொள்ளாதபட்சத்தில் சுயேச்சையாக தானே போட்டியிடப் போவதாகவும் கூறி உள்ளார். இது ஆர்ஜேடிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: