பான் - ஆதார் இணைக்க அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிப்பு

புதுடெல்லி: பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான அவகாசம் வரும் செப்டம்பம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். இதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, நேற்றுடன் முடிந்தது. ஆனால் பெரும்பாலான பான் எண்கள் இன்னமும்  ஆதாருடன் இணைக்கப்படவில்லை என அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து, பான் எண் மற்றும் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை  மத்திய அரசு நீட்டிப்பு  செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: