அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு சன் பவுண்டேஷன் 1.40 கோடி நிதி உதவி

அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சன் பவுண்டேஷன் 1.40 கோடி நிதி உதவி அளித்துள்ளது. நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள 17 அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக சன் பவுண்டேஷன் 1 கோடியே 40 லட்சத்து 39 ஆயிரத்து 700 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.

இதற்கான காசோலையை வேர்ல்டு விஷன் இந்தியா அமைப்பின் உதவி இயக்குனர் ரெல்டன் சாமுவேல், நிர்வாகிகள் ஜோஸ்வா பேட்ரிக், பெட்டி பிரியங்கா பால் ஆகியோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள். சமூக நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் இதுவரை 62 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: