சென்னை: 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 1000 கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12616 கிரமா நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது 2 ஆயிரத்து 896 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்தல் பணிகளில் அதிக அளவில் நிர்வாக அலுவலர்கள் அதிக அளவில் பயன்படுத்தபடுவார்கள் என்பதால் 1000 கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.