தேர்வு அறைகளுக்குள் சர்க்கரை நோயுள்ள மாணவர்கள் சாக்லேட், பழங்கள் எடுத்து செல்ல அனுமதி கோரிய வழக்கு ; இஎஸ்ஐ மருத்துவர் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை : பொதுத்தேர்வு, போட்டி தேர்வு அறைகளுக்குள் சர்க்கரை நோய் பாதிப்பு மாணவர்கள் பரிசோதனை ஸ்டிரிப், மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தேர்வு அறைக்குள் சர்க்கரை நோய்க்கு உதவும் பொருட்களை எடுத்து செல்ல 2017-ல் சிபிஎஸ்இ நிபந்தனைகளுடன் அறிக்கை வெளியிட்டது.

தேர்வு அறைகளுக்குள் சர்க்கரை நோயுள்ள மாணவர்கள் அவதி  

40 வயது முடிவடையும் ஆசிரியர்களில் பலருக்கு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், குடல் புண் நோய் ஆகியவை இருக்கும். தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளில் சிலருக்கும் சர்க்கரை நோய் இருக்கும்.

மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெல்ட் அணியக்கூடாது, ஷுக்கள் அணியக் கூடாது. என்றும் மாணவர்கள் தேர்வு அறைக்கு எதுவும் கொண்டு செல்லக்கூடாது என்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் மிகக்கடுமையாக இருக்கிறார்கள். இதனால் சர்க்கரை நோயுள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் சோர்வடைந்து பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆதலால் மாணவர்களால் சரியாக தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வி வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றிக்கை விடுத்துள்ளது. அதில் சர்க்கரை நோய் உள்ள மாணவர்கள், தேர்வின் போது சாக்லெட், தண்ணீர் உள்ளிட்ட தின்பண்டங்களை தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல்

இந்நிலையில் பொதுத்தேர்வு, போட்டி தேர்வு அறைகளுக்குள் சர்க்கரை நோய் பாதிப்பு மாணவர்கள் பரிசோதனை ஸ்டிரிப், மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி கோரி உயர்நீதிமன்றக் கிளையில் கேசவன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சர்க்கரை நோய் பாதிப்புள்ள மாணவர்கள்தேர்வு அறைக்குள் மாத்திரைகள், இன்சுலின் எடுத்துச் செல்ல தேர்வு நிர்வாகம் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் சர்க்கரை அளவு குறையும் போதோ அல்லது கூடும் போதோ தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் மாணவர்கள் பாதிப்படைவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ இஎஸ்ஐ மருத்துவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: