அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு: 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம்

சென்னை: அண்ணா  பல்கலைக் கழகத்தின் 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2017, 2018ஆம் ஆண்டில் தேர்வுகளில் முறைகேடில் ஈடுப்பட்டதால் 37 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விடைத்தாள்களை மாற்றி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2017, 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது குறிப்பிடிடத்தக்கது. இதில் ஊழியர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் 30 பேருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: