அரசு பள்ளிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதலே எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 2019-20ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சில வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாற்று சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள் இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். பின்னாளில் வழங்கினால் போதுமானது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கு வயது வரம்பை பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டுமென இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். மாணவர் சேர்க்கையின் விவரங்களை தினசரி பள்ளிக்கல்வித்துறையின் இ.எம்.ஐ.எஸ் இணையதயத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பதினோராம் வகுப்பை பொருத்தமட்டில் ஏப்ரல் முதல் நாளிலிருந்து சேர்த்துக்கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் அவர்களுக்கு குரூப் உறுதி செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கையால் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு ஏபரல் 1ம் தேதியே தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 35,000 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூகே.ஜி சேர்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடப்படத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: