நடமாடும் மருத்துவ மையங்களுக்கு சன் பவுண்டேஷன் 56 லட்சம் நிதி உதவி

கிராமப்புறங்களில் வாழும் முதியோர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, நடமாடும் மருத்துவ வாகனங்களுக்காக சன் பவுண்டேஷன் 56 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, இலவச சிகிச்சை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,  திருநெல்வேலி மற்றும்  வாடிப்பட்டி பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் முதியோர்களுக்கு  அவர்களது இடங்களுக்கே சென்று இலவச சிகிச்சை அளிப்பதற்காக,

நடமாடும் மருத்துவ  வாகனங்களுக்காக சன் பவுண்டேஷன் 56 லட்சத்து 9 ஆயிரம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோைலலைய, ஹெல்ப் ஏஜ்  இந்தியா தொண்டு நிறுவனத்தின் மாநில தலைவர் சிவக்குமார், இணை இயக்குனர்  (திட்டங்கள்) எட்வின் பாபு ஆகியோரிடம் சன் பவுண்டேசன் சார்பில் காவேரி  கலாநிதி மாறன் வழங்கினார். சமூகநலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் இதுவரை சுமார் 61 கோடி நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: