பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தை கண்காணிக்க குழு அமைப்பு

புதுடெல்லி: பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க பேம்-2 திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்புக்காக அமைச்சகங்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேட்டரி வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க பேம் - 1 (பேட்டரி வாகனங்கள் உற்பத்தி மற்றும் அவற்றின் பயன்பாட்டுக்கு துரிதமாக மாறுதல்) திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2 ஆண்டுக்கு செயல்படுத்தியது. இதன் அடுத்த கட்டமாக பேம் - 2 திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

  பேட்டரியில் இயங்கும் டூவீலர்கள் முதல் பஸ்கள் வரை ₹20,000ம் தொடங்கி ₹50 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கனரக தொழிற்சாலைகள் துறை செயலாளர் தலைமையில் நிதி ஆயோக் சிஇஓ, பொருளாதார விவகார செயலாளர் மற்றும் எரிசக்தி அமைச்சக செயலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டங்களால் பேட்டரி வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: