அரசியல் கட்சிகளுக்கு அசோசெம் கோரிக்கை

புதுடெல்லி: தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோசெம், பொதுத்தேர்தலில் கட்சியினருக்கு பொருளாதார வளர்ச்சி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளது. இந்த நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில கூறியிருப்பதாவது: வரும் 2025ம் ஆண்டில் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8 முதல் 8.5 சதவீதமாக நிலைநிறுத்த கட்சிகள் உறுதி ஏற்க வேண்டும். பெண்களுக்கு வேலையில் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு சதவீதம் வரி தள்ளுபடி வழங்க வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

கல்வியில் வெளியில் இருந்து பெறப்படும் கல்விச்சேவைகளுக்கு ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஜிஎஸ்டியை படிப்படியாக எளிமைப்படுத்தி 8 சதவீதம் மற்றும் 16 சதவீதம் என 2 வரி பிரிவுகளாக குறைக்க வேண்டும். பெருநிறுவன வருமான வரியை குறு, சிறு மற்றும் நடுத்த தொழில் துறையினருக்கு தற்போது உள்ள 25 சதவீதத்தில் இருந்து15 சதவீதமாகவும், பெரிய நிறுவனஙகளுக்கு தற்போது உள்ள 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் 5 ஆண்டுகளுக்கு குறைக்க வேண்டும் என அசோசெம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: