திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாத ஆண் குழந்தை கடத்தல்: திருமலை போலீசார் தீவிர விசாரணை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அருகில் உள்ள  ஒரு கடையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினர் பணிபுரிந்து வந்துள்ளனர். வழக்கமாக இவர்கள் பணிபுரிந்த பிறகு அதே பகுதியில் உள்ள எச்பில் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் வணிக வளாகத்தில் இரவு படுத்து உறங்குவது வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு நேற்று பணி முடிந்த பிறகு தனது 3 மாத ஆண் குழந்தையை பரியில் படுக்க வைத்து தூங்கியுள்ளனர். மேலும் இன்று அதிகாலை 5-30 மணிக்கு எழுந்து பார்க்கும் போது அருகில் படுக்க வைத்திருந்த தனது 3 மாத குழந்தை இல்லாததால் கௌசல்யா அதிர்ச்சியடைந்தார்.

எனவே இதுகுறித்து தனது கணவர் மகாவீரருக்கு தெரிவித்தார். இதையடுத்து மகாவீரர் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் திருமலையில் உள்ள இரண்டராவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை வைத்து போலீசார் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஒரு பெண், தூங்கிக்கொண்டிருந்த அந்த மூன்று மாத ஆண் குழந்தையை எடுத்து செல்வது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. எனவே இந்த காட்சிகளை வைத்து தற்போது குற்றவாளியை தேடும் பணியில் திருமலை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: