வேலூர் மாநகரில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மாநகரில் குறிப்பாக காகிதப்பட்டறை பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே, சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை மலையடிவாரம், ஓல்டு டவுன், வேலப்பாடி பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை வெகுஜோராக நடக்கிறது. இப்படி கஞ்சா எங்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறது?, யார், யார் விற்பனை செய்யுறாங்கனு காவல்துறைக்கு அத்துபடியாம். இவ்வாறு விற்பனை செய்து கிடைக்கும் வருவாயில் சரியான பங்கு சேர வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்து விடுகிறதாம். இதனால் மாசத்துக்கு ஒன்றோ, இரண்டோ வழக்குளை போட்டு நாங்களும் கஞ்சா விற்பனை செய்பவரை பிடிச்சோம்னு, வடக்கு, தெற்கு போலீசார் கணக்கு காட்டுறாங்களாம். குறைந்த விலைக்கு கஞ்சா கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாகி தவறான பாதைக்கு திரும்பி குற்ற வழக்குகளில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.