டோக்கனுக்கு கம்மல், மூக்குத்தியா? நகைக்கடைகளில் போலீஸ் உஷார்

சென்னை: தேர்தல் கமிஷனின் கடுமையான கெடுபிடிகளால் வாகன சோதனையில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவதையடுத்து, சுதாரித்துக் கொண்ட ஆளும் கட்சியினர், ஓட்டுக்காக வீடு வீடாக டோக்கன்களை வழங்கி, அந்த டோக்கன்களை நகை கடையில் கொடுத்து மூக்குத்தி, கம்மல், கொலுசு போன்ற பொருட்களை வாங்கி கொள்ள வழிவகை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் நகை கடைகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் ‘செக்’ வைத்துள்ளனர்.

மூக்குத்தி, கம்மல், 5 கிராம் செயின், 10 கிராம் செயின், வெள்ளி கொலுசு போன்ற பொருட்களை மொத்தமாக யாருக்கும் கொடுக்கக் கூடாது. ரெகுலர் கஸ்டமர் ஒருவர் 5 கம்மல்கள் கேட்டால், அது அவரது குடும்பத்திற்கு தேவையானது தானா என்பதை உறுதி செய்து கொண்டு வழங்க வேண்டும். டோக்கன் பெற்றுக் கொண்டு யாருக்கும் எந்த விதமான தங்க நகைகளையும் வழங்க கூடாது என போலீசார் நகை கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நகை கடைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: