‘அனிமல்ஸ் நோ என்ட்ரி’; ஐயா! நாய், நரி, பூனை, கரடி சின்னம் கொடுங்களேன்... கட்சி, வேட்பாளர்களை விரட்டும் ஆணையம்

புதுடெல்லி: அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரம், பேரணிகளில் யானை, குதிரை உள்ளிட்ட விலங்குகளை ஈடுபடுத்தத் தடைவிதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிதாக உருவாகும் அரசியல் கட்சிகளுக்கு இனி எந்தவொரு விலங்கையும் குறிக்கும் விதத்தில் சின்னங்கள் வழங்கப்படமாட்டாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சில அரசியல் கட்சிகளுக்கு யானை உள்ளிட்ட விலங்குகளைக் குறிக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால், தங்கள் கட்சிகளின் சின்னம் வாக்காளர்கள் மனதில் நன்றாகப் பதிய வேண்டும் என்பதற்காக தேர்தல் பிரசாரம், பேரணிகளில், தங்களது கட்சியின் சின்னமாக உள்ள விலங்குகளையும் அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தி வருகின்றன. கட்சித் தொண்டர்கள் பங்கேற்கும் கூட்டங்கள், ஊர்வலங்களில் விலங்குகளையும் பங்கேற்க வைப்பதால் அவை உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன.

இவற்றை தவிர்க்கும் பொருட்டு, ‘தேர்தல் பிரசாரங்களில் விலங்குகளைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். விலங்குகளின் சின்னங்களை வேட்பாளர்களுக்கு ஒதுக்கவும் கூடாது’ என்று பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. முன்னதாக இந்த தேர்தலிலும், வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் மட்டுமின்றி காட்டில் வாழும் விலங்குகளைச் சின்னமாகக் கேட்டு, சில கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.

இதையடுத்து, ‘அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம், பேரணிகளில் இனி விலங்குகளைப் பயன்படுத்த முற்றிலும் தடைவிதிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி புதிதாகப் பதிவு செய்யும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் விலங்குகளை குறிக்கும் விதத்திலான சின்னங்கள் ஒதுக்கப்பட மாட்டாது’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் விதிவிலக்காக உத்தரப் பிரதேசத்தில் பிரபலமான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக யானை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: