ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் என்பதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்விசிறிகளை அகற்ற வேண்டும்: தெலுங்கு தேசம் புகாரால் அதிகாரிகள் குழப்பம்

திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் என்பதால் அனைத்து அரசு அலுவலகங்களில் தேர்தல் முடியும் வரை மின்விசிறிகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் கடந்த 6 முறைகளுக்கு மேல் முதல்வர் சந்திரபாபு நாயுடு போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில் குப்பம் தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று மண்டல  தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.  அதில், `ஆந்திராவில் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் மின் விசிறி என்பதால் தேர்தல் முடியும் வரை வாக்காளர்களின் எண்ணத்தை  திசை திருப்பும் விதமாக  அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடிய மின் விசிறிகளை அகற்ற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

 

அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளின் அறையில்  மட்டும் ஏசி பொருத்தப்பட்டிருக்கும். மற்றபடி அரசு அலுவலங்களில், சிறிய அதிகாரிகள், ஊழியர்கள் இருக்கும் இடங்கள் அனைத்திலும் மின் விசிறி மட்டுமே பொருத்தப்பட்டு உள்ளது. தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் உள்ள மின்விசிறிகளைஅகற்ற வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் அளித்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் புகாரின் அடிப்படையில் மின்விசிறிகள் அகற்றப்படுமா?  என்று தெரியாத நிலையில்  அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். தேர்தல் அதிகாரிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: