14 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பசுமை கட்டிட விருது

சென்னை: முதல்வழித்தட திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 சுரங்கவழித்தட மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பசுமையான சுரங்கவழித்தட கட்டிட அமைப்பிற்கான விருது வழங்கப்பட்டது. சென்னையில் முதல்வழித்தட திட்டத்தின் கீழ் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இதேபோல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மேம்பட்ட பசுமை சேவை என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரத்தை சேமிக்க சோலார் தகடு அமைத்து வருகிறது. இந்நிலையில், சுரங்கவழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் சார்பில் சுரங்கவழித்தடத்தில் பசுமையான மெட்ரோ ரயில் கட்டிட அமைப்பிற்கான விருது நேற்று வழங்கப்பட்டது. இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தலைவர் சி.என்.ராகவேந்திரன் விருதை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சாலுக்கு வழங்கினார்.

இந்த விருது வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, பச்சையப்பா கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 14 ரயில் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது. விரைவில் திருமங்கலம், அண்ணாநகர் வடக்கு, அண்ணாநகர் டவர், ஷெனாய் நகர், எழும்பூர் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரைவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதேபோல், ஏற்கனவே, கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் நிர்வாக கட்டிடம் பசுமையாக அமைக்கப்பட்டதற்கான விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: