புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் சுட்டு கொலை : சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட்

சென்னை: ஜம்மு-காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி முத்சார் அகமது கான் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே பயணியர்கள் விமான நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.  

மேலும் விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில், அனைத்து வாகனங்களிலும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. விமான நிலைய உள்பகுதிகளிலும், வெளிப் பகுதிகளிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நலன் கருதி விமான நிலையத்தில், பார்வையாளர்களுக்குதடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதி முத்சார் அகமது கானும் அடக்கம். தீவிரவாதிகளிடம் இருந்து 2 AK-47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ட்ரால் அருகே பிங்லிஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் முத்சார் அகமது கானை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து தீவிரவாதிகள் எந்நேரமும் நாட்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: