கண்டலேறு அணையில் இருந்து 1.9 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்தது: மத்திய நீர்வள ஆணையத்தில் ஆந்திரா மீது தமிழகம் புகார்

சென்னை: ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் 12 டிஎம்சியில் தமிழகத்திற்கு 1.9 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையத்திடம் தமிழக அரசு ஆந்திரா மீது புகார் அளிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து ஒப்பந்தப்படி தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். இதில், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும். இந்த நிலையில் முதல் தவணை காலத்தில் தண்ணீர் திறந்து விடக்கோரி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன்பேரில் ஆந்திர அரசு கடந்தாண்டு அக்டோபரில் தண்ணீர் திறந்து விட்டது. 5 டிஎம்சியாவது தண்ணீர் தரும் என்று தமிழக அரசு எதிர்பார்த்த நிலையில், 1.6 டிஎம்சி மட்டுமே ஆந்திரா அளித்தது. இந்த நிலையில் ஜனவரியில் இரண்டாவது தவணை காலம் தொடங்கியது. ஆனால், தவணை காலம் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும் தண்ணீர் திறக்கப்படவில்ைல.

இதை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர் தலைமையிலான பொறியாளர்கள் ஆந்திரா சென்றனர். அவர்கள், ஆந்திர அரசு செயலாளரை சந்தித்து 1 டிஎம்சியாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையேற்று ஆந்திர அரசு கடந்த பிப்ரவரி 6ம் தேதி தண்ணீர் திறந்து விட்டது. கண்டலேறு அணையில் 2 ஆயிரம் கன அடி திறந்தாலும், தமிழகத்திற்கு வெறும் 350 கன அடி தான் வந்து சேர்ந்தது. தொடர்ந்து சில நாட்களிலேயே அங்கிருந்து வரும் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி திடீரென கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தவணை கால கட்டத்தில் 379 மில்லியன் கன அடி மட்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி 8 டிஎம்சி இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். தற்போது, 7 டிஎம்சி மட்டுமே இருப்பதால் இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு தவணை காலத்தில் ேசர்த்து தமிழகத்திற்கு 1983 மில்லியன் கன அடி (1.9 டிஎம்சி) மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 8 டிஎம்சிக்கு பாதி கூட திறக்கப்படாத நிலையில் இது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையத்திடம் புகார் அளிக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: