கஞ்சா, செல்போன் புழக்கம்? மதுரை சிறையில் 3 மணிநேரம் ரெய்டு

மதுரை: தமிழகத்தில் மதுரை, சென்னை புழல், சேலம், கோவை உள்ளிட்ட 9 மத்திய சிறை சாலைகள் உள்ளன. இந்த சிறைகளில் அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தி கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அதன்படி, மதுரை மத்தியச் சிறையில் செல்போன் பயன்பாடு இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று காலை 7 மணி அளவில், உதவி கமிஷனர் அலெக்ஸாண்டர் தலைமையில் 120 போலீசார், திடீர் சோதனை நடத்தினர். சிறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சிறையில் குறிப்பிடும் அளவில் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இருந்தாலும் அவ்வப்போது சோதனைகள் தொடரும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: