ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை வைத்து தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது: பிரமோத் குமார்

டெல்லி: அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதில், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தங்கள் தேர்தல் பிரசார விளம்பரங்களில் பயன்படுத்துவதாக ராணுவ அமைச்சகம் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும், இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிவடையவுள்ளது. இதனால் அதற்கு முன்பு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்தி வந்தது. அத்துடன் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனையையும் நடத்தி வந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் தகவல் தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான கடைசி கட்ட ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் இம்முறை தேர்தலை 7 அல்லது 8 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ராணுவ உயரதிகாரிகள், ராணுவ விழாக்கள் குறித்த படங்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: