வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் 24ம் தேதி பாடைக்காவடி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

வலங்கைமான்: வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் வரும் 24ம் தேதி பாடைக்காவடி திருவிழா நடைபெற உள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம் பேட்டைத்  தெருவில்  மகா மாரியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் சக்திஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.  இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும்  பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். நோய்வாய்பட்டவர்கள், டாக்டர்களால் கைவிடப்பட்டவர்கள் இங்கு வந்து பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இந்நிலையில்  இந்த ஆண்டு திருவிழா நேற்று (8ம் தேதி)  பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. முன்னதாக அம்மனின் புகைப்படம்  அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள்  வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை முதல்காப்பு கட்டும் நிகழ்ச்சி,  வரும் 17ம் தேதி இரண்டாவது காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. 31ம் தேதி புஷ்ப பல்லக்கும், ஏப்ரல் 7ம் தேதி கடை ஞாயிறு விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: