சென்னை: இந்தியன் வங்கி கோப்பை 3வது சீசன் ஹாக்கி தொடரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சென்னையில் மார்ச் 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இத்தொடரில் தமிழக காவல்துறை, வருமான வரித்துறை, மத்திய கலால், இந்திய விளையாட்டு ஆணையம் உட்பட 12 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றின் முடிவில் ஐசிஎப், தெற்கு ரயில்வே, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரை இறுதியில் ஐஓபி அணி 4-3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஐசிஎப்பை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 2வது அரை இறுதியில் இந்தியன் வங்கி 3-0 என்ற கோல்கள் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.
