மதுரை: மதுரையை சேர்ந்த லோகநாதன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை தடைசெய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடரப்பட்ட இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் கூறுகையில், ‘‘அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேரை தவிர மற்ற அனைவரின் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்றோம். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் குறித்தும்,