புதுடெல்லி: பாஜ.வின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் ஹேக்கர்களால் திடீரென முடக்கப்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், கட்சிகள் தங்களுக்கென பிரத்யேக இணையதள பக்கத்தை கொண்டுள்ளன. பாஜவும் //www.bjp.org, என அதிகாரப்பூர்வ இணையதளத்தை கொண்டுள்ளது. பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களின் பிரசார பயணங்கள் குறித்த தகவல்கள், கட்சியின் செயல்பாடு, புகைப்படங்கள் உள்ளிட்டவை இந்த இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.