ஒரு பக்கம் பாகிஸ்தான் அத்துமீறல்... மற்றொரு புறம் தொடர் பனிப்பொழிவு... காஷ்மீர் மக்கள் அவதி

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் அம்மாநிலம் மழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இன்னும் 2 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதற்கேற்றப்படி காஷ்மீர், ஜம்மு பகுதிகளில் பனிக்கட்டி மழை தொடர்கிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் வெள்ளாடை போர்த்தியது போல பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்சியஸ்-க்கு கீழே இருப்பதால் சாலைகளில் பனிப்படர்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் பனிக்கட்டிகள் தேங்கி கிடப்பதால் மக்கள் இன்னல் அடைந்துள்ளனர். ஆப்பிள் உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் அத்துமீறலால் எல்லையில் நிலவும் பதற்றம் ஒரு புறம் மக்களை அச்சுறுத்தும் நிலையில் தொடர் பனிப்பொழிவால் அவர்களது நிம்மதியை கெடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: