நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுகவினர் கட்சி அலுவலகத்தில் முற்றுகை

சென்னை: தென்சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் பகுதி அமமுக செயலாளர் கே.ஜி.முரளி கடந்த சில நாட்களுக்கு முன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். கட்சியின் துணைப் பொதுசெயலாளர் டிடிவி.தினகரனின் இந்த  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தை கட்சி நிர்வாகிகள் நூற்றுக்குக்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது, அவர்கள் கூறியதாவது: அமமுகவில் திறமையாக வேலை செய்யும் நபர்களை நீக்கிவிட்டு, மேம்போக்காக வேலை செய்பவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். இந்த நடவடிக்கையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை அலுவலக நிர்வாகிகளிடம் வழங்கினர்.

அவர்கள் வழங்கிய மனுவில், விருகம்பாக்கம் பகுதி செயலாளர் முரளி சிறப்பாக செயல்பட்டு வந்தார். பொய் புகாரில் அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளது வருத்தம்அளிக்கிறது. அவரை மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்க வேண்டும். இல்லையெனில், எங்கள் வட்டத்தை சேர்ந்த மகளிரணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் பொறுப்பிலிருந்து விலகுவோம். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் இருப்பார் என நம்பி வந்த கட்சி நிர்வாகிகள், அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவரது அடையாறு இல்லத்திற்கு பலர் படையெடுத்து சென்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: