பாரதிய ஜனதா ஆட்சியில் தீவிரவாத தாக்குதல்களுக்கு உடனடி பதிலடி : பிரதமர் மோடி பேச்சு

அகஸ்தீஸ்வரம்: மத்திய அரசின் சார்பில் முடிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது மத்திய அரசு சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களை துவக்கியும் வைத்தார் பிரதமர் மோடி. சென்னை எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம்  - தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பிக்க அடிக்கல் பிரதமர் மோடி நாட்டினார். இதையடுத்து மதுரை- செட்டிகுளம் இடையே 4 வழிச்சாலை பாதைக்கு அடிக்கல் நாட்டினார்

பின்னர் பேசிய பிரதமர் மோடியின் உரையை எச்.ராஜா மொழி பெயர்த்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை என்றார். விமான அபிநந்தனும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்வதாக கூறினார். இந்தியாவிலேயே மிக வேகமாக செல்ல கூடிய ரயில் இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக்காப்பீட்டு ஆயுஷ்மான் இந்தியாவில் செயல்படுத்தப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விவசாயிகள் உதவிநிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வருவாய் உதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்றார். 1.10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ஏற்கனவே உதவி நிதி சென்றுவிட்டது என்றார். உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியாஅடுத்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள தொகை ரூ.7.5 லட்சம் கோடியாகும் என்றார்.

காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் எல்லாம் சரியாக தேர்தல் சமயங்களில் மட்டுமே வரும் என்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு 2014-ல் தான் ஒரு கட்சிக்கு முழுபெரும்பான்மை கிடைத்தது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக மத்திய அரசு ரூ.300 கோடி ஒதுக்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். வானிலை பற்றி அறிந்து கொள்ள நாவிக் கருவி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியத பாஜ தலைமையிலான மத்திய அரசு தான் என்றார். புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே உள்ள துறைமுகங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தியது பாரதிய ஜனதா அரசு என்றார் மோடி. 2004 - 2014 வரை ஏராளமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. முந்தைய அரசு இதற்கு உரிய பதிலடி கொடுக்கவில்லை. ஆனால் பாஜ அரசில் நடைபெற்ற உரி தாக்குதலின் போது விரைந்து உரிய பதிலடி கொடுக்கப்பட்டது என்றார். புல்வாமா தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்பட்டு விட்டது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியில் என்றார். மக்கள் குடும்ப அரசியலை விரும்பவில்லை, முன்னேற்றத்தையும், நேர்மையான அரசியலையும் விரும்புகிறார்கள். மக்களின் வாக்குகளை பெற்ற முந்தைய அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: