ஹெலிகாப்டர் விபத்து நேபாள அமைச்சர் உட்பட 7 பேர் பலி

காத்மாண்ட்: நேபாளத்தில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ரபீந்திரா அதிகாரி. இவர், பிரதமரின் உதவியாளர் யுபராஜ் தாஹல் மற்றும் அதிகாரிகள், பாதுகாவலர்கள் உள்பட 7 பேர் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இந்த ஹெலிகாப்டர் டாப்ளேஜங் மாவட்டத்தில் உள்ள சுச்சேடாடா மலைப்பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இதில், விமானி பிரபாகர், அமைச்சர் ரபீந்திரா உள்ளிட்ட ஏழு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்ட அதே நேரத்தில் பதிபாரா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மலைப்பகுதியில் மிகப்பெரிய அளவில் தீ கொளுந்துவிட்டு எரிவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு போலீசார் குழு விரைந்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. பின்னர் அங்கு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: