விமானப்படை தாக்குதல் தமிழக தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பாராட்டு

சென்னை: தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குலுக்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி:  பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இந்திய விமானப்படை விமானிகளின் நடவடிக்கையை எண்ணி பெருமை கொள்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ்:  விமானப்படை இந்திய மக்களிடம் நிம்மதியையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தியுள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டத்தக்கது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதனை சாதித்த இந்திய வீரர்களுக்கு பாராட்டுக்கள். இந்தியப்படையின் வீரத்திற்கு தலைவணங்குவோம். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய அரசு தீவிரவாதத்துக்கு எதிராக எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை பாராட்டுக்குரியது. தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க விமானப்படை வீரர்கள் திறமையாக செயல்பட்டதற்கு வணக்கங்கள்.

விசிக தலைவர் திருமாவளவன்: பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கான  இந்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். சமக தலைவர் சரத்குமார்: இந்திய விமானப்படையினர் நடத்தியுள்ள, வலுவான தாக்குதலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளையில், பாகிஸ்தான் மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்புத் துறையினர் தயார்நிலையில் இருந்து வெற்றிகரமாக செயலாற்ற பிரார்த்திக்கிறேன்.

ரஜினிகாந்த்: சபாஷ் இந்தியா.

கமல்ஹாசன்: தீவிரவாதிகளின் முகாம்களை அழித்துவிட்டு நம் வீரர்கள் வெற்றியுடன் திரும்பியுள்ளனர். இவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். இவர்களை பார்த்து இந்தியா பெருமை கொள்கிறது. இந்த வீரத்துக்கு ஒரு சல்யூட். அஜய் தேவ்கன்: இது மிகச்சிறப்பான அதிரடி தாக்குதல். இந்திய விமானப் படைக்கு வீர வணக்கம். மகேஷ் பாபு: நமது வீரர்களின் செயலால் பெருமையாக இருக்கிறது. இந்த வீரதீர நடவடிக்கைக்கு பாராட்டுகள்.

ஜூனியர் என்டிஆர்: இந்திய விமானப் படைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். வரலாற்று சிறப்புமிக்க தாக்குதல். பிரீத்தி ஜிந்தா: தீவிரவாதிகளை கொல்வதன் மூலம் அப்பாவிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் கூடாரத்தை அழித்து விமானப்படை சாதித்து காட்டியிருக்கிறது. டாப்ஸி: இந்த தாக்குதல் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. எப்படி திட்டமிடப்பட்டதோ அதன்படியே அனைத்தும் நடந்திருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. பெருமையாக இருக்கிறது.

தமன்னா: இந்திய விமானப் படையினரால் பெருமை கொள்கிறேன். கவுதமி: நமது பாதுகாப்பு படையை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வீரர்களுடனும் நாங்கள் ஒட்டுமொத்தமாக இருக்கிறோம். நமது உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கிற ராணுவ படைக்கு ராயல் சல்யூட். இதே போல பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: