பிப்.25- ல் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ட்விட்டர் சிஇஓ ஜாக் டார்சி மீண்டும் ஆஜராக மறுப்பு

டெல்லி : பிப்ரவரி 25-ஆம் தேதி நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன் ட்விட்டர் சிஇஓ ஜாக் டார்சி மீண்டும் ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த பிப்.11-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜாக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அன்று ஆஜராக வேண்டிய அதிகாரிகள் ஆஜராகாத காரணத்தால்,  டிவிட்டரின் தலைமை அதிகாரி ஜாக் டோர்சி 15 நாள்களில் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் அவருக்கு பதிலாக ட்விட்டரின் பொதுச்சேவை துணை தலைவர் கோலின் இக்கோரோவில் ஆஜராகவுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் அவை சம்பந்தப்பட்ட நபர்களின் சொந்த கணக்குகள் மூலம் வெளியிடப்படவில்லை போலியான கணக்குகள் மூலம் வெளியாகி வருகிறது எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் டிவிட்டர் நிறுவனம் பல முக்கியமான கணக்குகளை தன்னுடைய இணைப்பிலிருந்து நீக்கிவிட்டது என்றும், இதில் நீக்கப்பட்டவர்கள் ஒரே சார்பை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்றும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும், புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படியிலேயே டிவிட்டர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன் ட்விட்டரின் பொதுச்சேவை துணை தலைவர் கோலின் இக்கோரோவில் ஆஜராகவுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: