சட்டப்பல்கலை பேராசிரியர்கள் நியமன விவகாரம் 32 பேர் கல்வித்தகுதி குறித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றிய டி.சங்கர், தன்னை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றும் 32 பேராசிரியர்கள், தங்களின் கல்வித் தகுதி, நியமனம் குறித்த தகவல்களை பதில் மனுக்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தனி நீதிபதி, வழக்கின் எல்லையை மீறி தன் விருப்பம் போல உத்தரவுகளை பிறப்பித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் மீண்டும்  விசாரணைக்கு வந்தது.  அப்போது, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

 அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறது என்றார்.இதைக்கேட்ட நீதிபதிகள், சட்டபல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனம் எப்படி நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும் என்றனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.தீர்ப்பில், 32 பேராசிரியர்களின் நியமனம் மற்றும் கல்வித் தகுதி தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி வழக்கின் எல்லையைத் தாண்டி உத்தரவிடமுடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: