கும்பமேளாவில் மகி பூர்ணிமா 1 கோடி பக்தர்கள் புனித நீராடினர்

அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 15ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. வரும் மார்ச் 4ம் தேதி கும்பமேளா நிறைவடைகிறது. தினந்தோறும் கும்பமேளாவில் பக்தர்கள் நீராடி வருகின்றனர்.மகரசங்ராந்தியன்று, அதாவது பொங்கல் தினத்தன்று பக்தர்கள் முதல் புனித நீராடலை கடைப்பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மவுனி அமாவாசை எனப்படும் தை அமாவாசை, பசந்த் பஞ்சமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடினர். நேற்று மகி பூர்ணிமா எனப்படும் பவுர்ணமி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று மாநில அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 3 மணி முதலே பக்தர்களின் வருகை  தொடங்கியது. இதில், ஒரு கோடி பேர் நீராடினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: