மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ.8.71 லட்சம் அபராதம்

சென்னை: சென்னையில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீட்டு தொகையாக, ரூ.8.71 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:சென்னை மின்வாரிய அமலாக்க கோட்டம் சார்பில் கெருகம்பாக்கம், கோவூர் மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 16  மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ரூ.7,96,605  இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க கூடுதலாக சமரச கூடுதல் தொகை ரூ.75,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு  செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை- 9445857591  என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: